48 இலட்சம் ரூபா பெறுமதியுடைய மாணிக்கக் கற்களை கடத்த முற்பட்டவர் கைது

சுமார் 48 இலட்சம் ரூபா பெறுமதியுடைய ஒருதொகை மாணிக்கக் கற்களை சட்டவிரோதமாக தாய்லாந்தின் பேங்கொங்கிற்கு கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பைச் சேர்ந்த 26 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.