கர்ப்பிணிகள் உட்கொள்ளும் உணவு கர்ப்ப காலத்திற்கு ஏற்றதாக அமைந்திருக்க வேண்டும்

கர்ப்பிணிகள் உட்கொள்ளும் உணவு கர்ப்ப காலத்திற்கு ஏற்றதாக அமைந்திருக்க வேண்டுமென்று விசேட வைத்தியர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

கர்ப்ப காலப்பகுதியில் உண்ணும் உணவு கர்ப்பப்பையில் உள்ள குழந்தை மீது தாக்கத்தை ஏற்படுத்துவதே இதற்கான காரணமாகும்.

கர்ப்பிணித் தாய்மார் உணவை உண்ணும் போது இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். விசேடமாக தாய் மற்றும் தந்தையின் செயற்பாடுகளும் கர்ப்பப்பையில் உள்ள குழந்தையின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துமென்றும் வைத்தியர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டார்.

கர்ப்பப்பையில் உள்ள குழந்தை நான்கு மாதம் முதல் தாயின் உரையாடல்களை செவிமடுக்கும் வல்லமையைப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்கத்திய நாடுகளில் வைத்தியர்கள் தற்போது கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கும் ஆலோசனைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எமது மூதாதையர் மேற்கொண்ட நடைமுறையாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.