ஹெரோய்ன் வைத்திருந்த 49 வயதுடைய பெண் கைது

ஹெரோய்ன் வைத்திருந்த பெண், வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, இந்தப் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 6 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது. ஒருகொடவத்த பிரதேசத்தைச் சேரந்த 49 வயதுடைய ​பெண்னே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட ​பெண்ணை மாளிகாகந்த மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.