வீரவங்சவுக்கு பிணை வழங்கக் கோரி மீளாய்வு விண்ணப்பம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு (wimal Weerawansa )பிணை வழங்கக் கோரி மீளாய்வு விண்ணப்பம் ஒன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விமல் வீரவங்சவின் சட்டத்தரணியால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

wimal Weerawansa

இதன்படி, அண்மையில் கோட்டை நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கை தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவை மீளாய்வு செய்து, விமல் வீரவங்சவை பிணையில் விடுதலை செய்யுமாறு மேல் நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கடந்த 10ம் திகதி கைதுசெய்யப்பட்ட விமல் வீரவங்ச, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.