திமிங்கிலங்களை பார்வையிடும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளிடம் கூடுதலான பணத்தை அறவிடுவதை தவிர்க்கவேண்டும் – அமைச்சர் மகிந்த அமரவீர

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளிடம் திமிங்கிலங்களை பார்வையிடுவதற்காக பெருந்தொகைப்பணத்தை வள்ளங்களின் உரிமையாளர்கள் அறவிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு விசேட சலுகைகள் எதுவும் இல்லை இவர்களிடம் இவ்வாறு பணம் அறவிடுவது சுற்றுலாத்துறைக்கு பொருத்தமானது அல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தற்பொழுது அறவிடப்படும் பணத்தை 4000 ரூபாவாக குறைக்கவேண்டும் என்று வள்ளங்களின் உரிமையாளர்களிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மிரிச மற்றும் கப்பறா தொட்ட கரையோரப்பகுதிகளிலும் மீன்பிடித்துறைமுகப்பகுதிகளிலும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் திமிங்கிலங்களைப் பார்வையிடுவதற்காக வருகின்றனர்.

இவர்களை வள்ளங்களில் அழைத்துச்செல்வதற்காக வள்ளங்களின் உரிமையாளர்கள் 6000ரூபா பணத்தை அறவிடுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மிரிசவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.