VPN செய­லியை பயன்படுத்தி சமூக வளை­த­ளங்களுக்கு செல்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!!

கண்டி சம்­ப­வத்­தை­ய­டுத்து இன­வாத கருத்­துக்கள் வீண் வதந்­திகள் பர­வா­ம­லி­ருக்கும் வகையில் நாட்டின் பாது­காப்பை கருத்­திற்­கொண்டு அர­சாங்­கத்தால் முடக்­கப்­பட்­டி­ருந்த சமூக வளை­த­ளங்கள் நேற்று சனிக்­கி­ழமை முதல் இயங்கும் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தாலும் தொடர்ந்தும் அவை செயற்­ப­டா­ம­லேயே இருக்­கின்­றன.

கண்­டியில் இடம்­பெற்ற வன்­முறை சம்­ப­வங்­க­ளை­ய­டுத்தே பேஸ்புக் , வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக வலை­த­ளங்கள் இலங்கை தொலை­தொ­டர்­புகள் மற்றும் ஒழுக்­காற்று ஆணைக்­குழு தற்­கா­லி­க­மாக முடக்­கி­யி­ருந்­தது. 72 மணித்­தி­யா­ல­யங்­க­ளுக்கு மட்­டுமே இக்­கட்­டுப்­பாடு என அறி­விக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் தொடர்ச்­சி­யாக இவை முடக்­கப்­பட்ட நிலை­யி­லேயே இருக்­கின்­றன.

இந்­நி­லையில் ஒரு சிலர் விசேட மென்­பொ­ருட்­க­ளாலும் வேறு வழி­க­ளாலும் முகநூல் மற்றும் வட்ஸ்அப் உள்­ளிட்ட செய­லி­களை தமது கைய­டக்­கத்­தொ­லை­பேசி ஊடா­கவும் பயன்­ப­டுத்த ஆரம்­பித்­துள்­ளமை முக்­கிய விடயம். அவ்­வா­றான வழி­மு­றை­களை அறிய இளை­ஞர்கள் ஆர்வம் கொண்­டுள்ள அதே வேளை தமக்கு தெரிந்த வழி­க­ளையும் குறுந்­த­க­வல்கள் மூலம் தமது நண்­பர்­க­ளுக்கு அனுப்பி வரு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதில் முக்­கி­ய­மாக வௌிநாட்டு இணைய முக­வரி (IP) ஒன்றை பயன்­ப­டுத்தி கூகுள் நிறு­வ­னத்தின் VPN எனும் செய­லியை அதிக முறை பதி­வி­றக்கம் செய்து அத­னூ­டாக சமூக வலை தளங்­களை பலரும் பயன்­ப­டுத்­தி­யுள்­ளனர். கடந்த 72 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் VPN எனும் செய­லியை அதிக தடவை பதி­வி­றக்கம் செய்த நாடாக இலங்கை பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

அவ்­வாறு பயன்­ப­டுத்­து­வதை இல­கு­வாக கண்­ட­றி­யலாம் என தொலை தொடர்­புகள் ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது. இது குறித்து டிஜிட்டல் உட்­கட்­ட­மைப்பு மற்றும் வௌிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் ஹரீ்ன் பெர்­ணாண்டோ தெரி­விக்­கையில் சமூக வலை­த­ளங்கள் முடக்­கப்­பட்­டாலும் வேறு வழி­களில் சிலர் அதை பயன்­ப­டுத்தி தக­வல்­களை பரி­மாறி வரு­கின்­றனர். மக்கள் மத்­தியில் பதற்­றத்­தையும் வீண் முறு­கல்­க­ளையும் ஏற்­ப­டுத்தும் வண்ணம் இவ்­வாறு தக­வல்­களை பரப்­பினால் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் மேலும் வேறு வழி­களில் சமூக வலை­த­ளங்­களை பயன்­ப­டுத்­துவோர் குறித்து கண்­ட­றி­வது கடி­ன­மான வேலை­யல்ல. இப்­ப­டி­யா­ன­வர்­க­ளுக்கு எதி­ரா­கவும் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அவர் தெரி­வித்தார்.

இதே வேளை தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டுள்ள முகப்­புத்­தகம், வட்ஸ்அப், வைபர் உள்­ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சமூக வளை தளங்கள் நேற்று (சனிக்கிழமை) முதல் வழமையாக இயங்கும் என ராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]