சர்ச்சைகள் வரும் என்று எனக்கு தெரியும் – நடிகர் விஜய்

Vjjay Kamal 2018 Vikatan Awards –

அவசியம் கருதியே சர்ச்சை வசனங்களை பேசினேன் என விகடன் விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசினார்.

விகடன் விருது வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. 2017-ம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டது.

இந்த விருதை கமல்ஹாசன் விஜயக்கு வழங்கினார்.

விருதை பெற்றுக் கொண்ட விஜய்

தமிழ் கலாச்சாரத்துக்கு முக்கியதுவம் கொடுத்து நடித்த படத்திற்கு தமிழர் திருநாளான இன்று விருது வாங்குவதில் ஒரு தமிழனா எனக்கு பெருமை.

சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பிடித்ததால் பிரச்னைகளை சந்தித்தVjjay Kamal 2018 vikatan awards மெர்சல் படம் வெளியீட்டின் போது ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள்.

சர்ச்சைகள் வரும் என்று எனக்கு தெரியும். அவசியம் கருதியே மெர்சல் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை பேசினேன்.

மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு வந்த நிலையில், எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]