ஊடகவியலாளர் வித்தியாதரனை தமிழ் அரசு கட்சிக்குள் இணைப்பதைத் தடுக்க மாவை எம்.பிக்கு அழுத்தம்

ஊடகவியலாளர் வித்தியாதரனை (Vithyadaran ) தமிழ் அரசு கட்சிக்குள் இணைப்பதைத் தடுக்க மாவை எம்.பிக்கு அழுத்தம்

மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனை கட்சிக்குள் இணைத்து யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக நியமிக்க தமிழ் அரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் முன்னெடுக்கும் முயற்சியைத் தடுக்குமாறு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு கடும் அழுத்தம் வழங்கப்படுவதாக அறிய முடிகின்றது.

அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட சிலரிடமிருந்தே இவ்வாறு அழுத்தம் வழங்கப்படுவதாகத் தெரியவருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை இராப்போசனத்துக்கு இன்றிரவு அழைத்த கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர், இந்த அழுத்தத்தை வழங்கினார் என பெயரை வெளிப்படுத்த விரும்பாத ஒருவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஊடக பலத்தை தமிழ் அரசுக் கட்சி இழக்கும் நிலை ஏற்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் முன்னணி நாளிதழ்  கடந்த ஒரு வாரமாக மாற்றத்துடன் வெளிவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மகிழ்ச்சி வெளியிட்டார். வழமையாக அந்தப் பத்திரிகையை வசைபாடும் அவரின் போக்கிலும் மாற்றம் காணப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]