2 – லட்ச ரூபாய் நிவாரண உதவிகளை செய்தார் நடிகர் விஷால் !!

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நேதாஜி நகர் மக்களுக்கு 2 – லட்ச ரூபாய் மதிப்பிலான உடனடி நிவாரண உதவிகளை செய்தார் நடிகர் விஷால் !!

கடந்த வாரம் ஞாயிற்று கிழமை சென்னை எண்ணூர் அருகே உள்ள நேதாஜி நகரில் தீ விபத்து ஏற்ப்பட்டது. இதனால் அங்கே வசித்து வரும் 25 குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. உதவியின்றி தவித்து வந்த அந்த குடும்பங்கள் பற்றி அறிந்த நடிகர் விஷால் உடனே அவர்களுக்கு உதவ முன்வந்தார். அங்கே வசித்து வந்த 25 குடும்பங்களில் குழந்தைகள் உட்பட 216 பேர்களுக்கு தேவையான உணவு , போர்வை , சமையலுக்கு தேவையான காய் கறிகள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். விஷாலின் இந்த உடனடி உதவியால் பயனடைந்த மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்து அவரை வாழ்த்தினர். இன்னும் அந்த மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தான் செய்து கொடுக்க தயார் என்றார் நடிகர் விஷால். நேதாஜி நகர் மக்களுக்கு உதவும் பணிகளை அம்மக்களோடு இருந்து நடிகர் விஷாலின் குழுவினர் கவனித்து வருகின்றனர்.