விஜய்யுடன் ஏ.ஆர்.முருகதாஸ் – தளபதி 62

‘தீனா’, ‘ரமணா’, ‘கஜினி’, ‘ஸ்டாலின்’, ஹிந்தி ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’ என ஆறு படங்களை இயக்கிவிட்டுத்தான் விஜய்யுடன் கை கோர்த்தார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். முதல் முறையாக இணைந்த இந்தக் கூட்டணியில் வெளிவந்த ‘துப்பாக்கி’ வரலாறு காணாத வெற்றியையும் வசூல் மழையையும் பெற்றுக் கொடுத்தது. அதேபோல் விஜய்க்கும் பொதுவான ரசிகர்களிடம் நல்ல பெயரையும் பெற்றுக் கொடுத்தது. sun-pictures-officially-announced-principle-cast-crew-vijay-ar-murugadosss-film-thalapathy-62

sun-pictures-officially-announced-principle-cast-crew-vijay-ar-murugadosss-film-thalapathy-62

அடுத்து இதே கூட்டணியில் வெளிவந்த ‘கத்தி’யும் நல்ல வெற்றிப் படமாக அமைந்தது. இந்த நிலையில் மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதும் தெரிந்த விஷயமே. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவாளராகவும், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும் பணிபுரிய உள்ளார்கள்.

இந்தப் படத்தின் போட்டோஷூட் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் செம ஸ்டைலிஷ் ரிச் லுக்கில் அசத்தலாக உள்ளார் விஜய். கிருதாவுடன் மெல்லிசாக அட்டாச் செய்த பிரெஞச்தாடி லுக்கில் ஸ்மார்ட்டாக உள்ளார். ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்களை விட மாறுபட்ட லுக்கில் விஜய்யை காட்ட வேண்டும் என்று உறுதியாக முருகதாஸ் இருப்பது தெரிகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]