விஜய் “61”

இளையதளபதி விஜயின் 61(vijay 61)வது படத்தினை “ராஜா ராணி” மூலம் பிரபல்யமான டைரக்டர் அட்லி டைரக்‌ஷன் செய்கிறார்.

விஜயின் பைரவா படமானது 100 கோடி வசூலையும் தாண்டி இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் மிகப் பெரியதொரு திருப்புமுனையான படமாக விஜய்க்கு அமைந்துள்ளது. இளையதளபதியின் 61வது படமானது அவரின் ரசிகரிடத்தில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்றும் இப்படத்தில் கதாநயகிகளாக காஜாஅகர்வல், சமந்தா நடிக்கின்றனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, ஜோதிகா நடிக்கின்றனர். வடிவேல், சத்யன், கோவை சாரளா காமெடியன்ஸ்ஸாக நடிக்கின்றனர். இப்படத்தை தன் இசையால் மெருகூட்டுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
vijay 61

இப்படத்தின் காட்சிகள் இன்றிலிருந்து படமாக்கப்பட்டு வருகிறது.

அட்லி தனது சமூக வலைத்தளத்தில் விஜய் 61 படப்பிடிப்புதொடங்கியது எனவும், டைரக்டர் ராஜ மௌலி அட்லிக்கு தொலைபேசியூடாக வாழ்த்து தெரிவித்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.

vijay 61

இப்படத்தின் ஆடை வடிவமைப்பாளராக நீரஜா கொனா உள்ளார்.
vijay 61