மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளன

நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளன.

தற்போது ஒரு கிலோ கோவா 10 ரூபாவிற்கும் ஒரு கிலோ பீற்றூட் 30 ரூபாவுக்கு உட்பட்டதாக விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கரட் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

பருவகால நிலை உற்பத்திக்கு ஏற்ற வகையில் அமைந்திருந்ததனாலேயே இம்முறை அமோக அறுவடை பெறப்பட்டிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.