கிளிநொச்சியில் 244 பேருக்கு சிகிச்சை

கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில், பன்றிக்காய்ச்சல் (H1N1 இன்ப்ளுவன்சா) நோய்த் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட 244 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நோய்த் தொற்றுக்கு உள்ளாகிய முதலாவது குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட தினமான பெப்ரவரி 10ஆம் திகதி தொடக்கம் கடந்த 3ஆம் திகதி வரையான 21 நாட்களில், இவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மற்றும் அயல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு சிகிச்சைப் பெற்றுள்ளதுடன், இவர்களுள் 25 கர்ப்பிணிகள், 9 சிறுவர்களும் உள்ளிட்ட 37 பேர், H1N1 இன்ப்ளுவன்சா நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளமை, கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. –