சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர எதிர்பார்ப்பு

இவ் வருடம் இலங்கைக்கு 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை(Tourism ) அழைத்து வர எதிர்பார்த்துள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் இருபது இலட்சத்து ஐம்பத்து எட்டாயிரம் பேர் நாட்டுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

Tourism

முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் இது நூற்றுக்கு 14 வீத அதிகரிப்பாகும்.

2016ம் ஆண்டு இலங்கை சுற்றுலாத் துறை மூலம் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு வருமானமாக கிட்டியுள்ளது.

எனினும் 2015ம் வருடம் அது 2.8 பில்லியனாக இருந்ததாக சுற்றுலா அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, 2020ம் வருடம் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 4 மில்லியனாக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.