TNAவுடன் இணைந்து ஐ.தே.க அரசாங்கத்தை உருவாக்குவோம் – கிரியெல்ல

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றுக்கு இடையிலான ஒப்பந்தம் டிசெம்பர் 31 திகதியுடன் நிறைவடைந்தால் எதிர்க்கட்சி உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு ஐ.தே.க ஆட்சியமைக்கும் என அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அவ்வாறு ஒன்றிணையும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு இடையில் இருக்கும் அதியுட்ச நம்பிக்கையின் ஊடாக அரசாங்கத்தை மேலும் முன்னெடுத்து செல்லமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ளவுள்ள உறுப்பினர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஒன்றிணைந்த எதிரணியில் உறுப்பினர்களும் அடங்குவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றுக்கு இடையிலான ஒப்பந்தம் ஓகஸ்ட் 31 திகதியுடன் நிறைவுக்கு வந்த நிலையில், ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தரப்பினர் டிசெம்பர் 31 வரை அரசாங்கத்தில் இணைந்திருக்கு ஒப்புக்கொண்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]