அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுப்போம் – டில்வின் சில்வா

(யாழ்ப்பாணம்), சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுப்போம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளா டில்வின் சில்வா (Tilvin Silva) இன்று (08.10) தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளார் சந்திப்பின் போது அநுராதபுரம் சிறையில் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் முன்னெடுத்து வருகின்றார்கள். அரசியல் கைதிகளின் விடுதலை தொடார்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளார்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

அதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவிக்கையில், அரசியல் கைதிகளின் பிரச்சினை மிகப் பெரிய பிரச்சினையாக மாறியள்ளது.

கடந்த காலங்களில் இரு சிலரை விடுதலை செய்வதற்கும் வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது.

இன்றும் சிறையில் இருப்பவர்கள் பல இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். பல ஆண்டுகளாக சிறைக்கைதிகளாக இருக்கின்றார்கள். அவர்கள் அநுபவித்த துன்பங்கள் போதும் சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென அரசிற்கு அழுத்தங்கள் கொடுத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளார் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டில்வின் சில்வா தொpவித்தார்.