இடியுடன் கூடிய மழை

நாட்டில் பெரும்பாலன பகுதிகளில் பிற்பகல் இரண்டு மணியின் பின்னர் மழை பெய்யும் என்று வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு, தெற்கு கரையோரங்களில் காலை வேளையில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழையின் போது வலுவான காற்றும் வீசக்கூடும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடி மின்னல் தொடர்பாக மக்கள் அவதானமாகச் செயற்படுமாறும் திணைக்களம் கேட்டுள்ளது.