T20 போட்டியிலும் வங்கதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து.
வங்கதேச அணியுடனான முதல் T20 போட்டியில், நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மெக்லீன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில்,நாணய சுழற்சியில் வென்று துடுப்பாடிய வங்கதேசம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 141 ஓட்ட்ங்களை எடுத்தது. மஹ்மதுல்லா அதிகபட்சமாக 52ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார் . மொசாடெக் 20, ஷப்பிர் 16, ஷாகிப் 14, தமிம்11 ஓட்ட்ங்களை பெற்றுக்கொடுத்தனர் . நியூசிலாந்து பந்துவீச்சில் பெர்குசன் 3, வீலர் 2, ஹென்றி, கிராண்ட்ஹோம், சன்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 18 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்ட்ங்களை எடுத்து வெற்றி பெற்றது . புரூம் 6, கோலின் மன்றோ 0, அண்டர்சன் 13, புரூஸ் 7 ஆகியோர் ஓட்ட்ங்களில் ஆட்டமிழந்தனர்.
அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 73 ஓட்டங்களையும் , கிராண்ட்ஹோம் 41 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர். வில்லியம்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், நியூசிலாந்து . 1-0 என்றநிலையில் முன்னிலை வகிக்க, 2வது T 20 போட்டி ஓவல் மைதானத்தில் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.