இளம் தாயொருவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளர்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சலுக்கு இலக்காகி சிகிச்சைப் பெற்று வந்த இளம் தாயொருவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “​கெப்பற்றிக்கொலவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண், குழந்தை பிறந்து ஒருகிழமை கடந்த நிலையில், பன்றிக்காய்ச்சல் நோய்க்கு உள்ளாகி, கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர், புதன்கிழமை (01) உயிரிழந்துள்ளர்.