Sri Lanka, the opening day of the first integrated power station

எழுவைதீவுப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது ஒன்றிணைந்த மின் சக்தி நிலையம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.
மின்வலு மற்றும் மீள் புத்தாக்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு நடைபெறவுள்ளது.
பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டு வருட கால ஆட்சி நிறைவினை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் இது அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..