சாதகமான பொருளாதார பெறுபேறுகள் (Sri Lanka Economy)

Sri Lanka Economy

இலங்கை மத்திய வங்கியும், அரசாங்கமும் கடந்த வருடத்தின் இறுதிப் பகுதி முதல் பின்பற்றும் நிலையான செயற்பாடுகளினால் நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான பெறுபேறுகள் இடம்பெற்றுள்ளன.

இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை தேவை ஏற்படின் முறையான நடவடிக்கைகளின் மூலம் வெற்றிகரமான பொருளாதார வளர்ச்சியை மேற்பார்வை செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.

நிதிச் சபையின் கூட்டம் நேற்று இடம்பெற்றது.இதன்போது இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதி ஸ்திரத் தன்மை இந்த சந்தர்ப்பத்திற்கு பொருத்தமானதாகும். நிலையான வைப்பு வீதத்திலும், நிலையான கடன் வழங்கல் வசதிகள் வீதத்திலும் மாற்றங்கள் இன்றி, தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தின் பணவீக்கம் ஐந்து தசம் ஐந்து சதவீதமாகக் காணப்பட்டது.

சீரற்ற காலநிலையும், வரி மாற்றங்களும் இதில் தாக்கம் செலுத்தியிருந்தன. பொருத்தமான விநியோகங்கள் மற்றும் கேள்விகள், முகாமைத்துவ கொள்கைக்கு அமைய, இவ்வாண்டின் பணவீக்கம் தனி அலகினால் பேணப்படும் என்று மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஜனவரி மாத இறுதிப் பகுதியில் நாட்டின் மொத்தத் தேசிய ஒதுக்கம் 550 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. சுற்றுலாத்துறையின் வருமானம் 14 சதவீத அதிகரிப்புடன் 340 கோடி அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.