பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர் என்று கூறப்படும் சமயங் என்றழைக்கப்படும் அருண உதயசாந்த பத்திரமீது, துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில், அவரும் அந்த பஸ்ஸில் ஏற்றிச்செல்லப்பட்ட கைதிகளில் ஐவரும் பலியாகியுள்ளனர்.

சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு, சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றிச்சென்றபோதே, அவர்கள் மீது களுத்துறை பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஏழுபேரில், சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் அடங்குகின்றனர். அத்துடன், சம்பவத்தில் காயமடைந்த அதிகாரிகள் நால்வர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.