அமைச்சர் செந்தில் தொண்டைமான் பரிசு

தமிழ்நாடு மதுரை மாவட்டம் அலங்கநல்லூரில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டைமான் பரிசு பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையாக செந்தில் தொண்டைமானுடைய காளை தேர்ந்தெடுக்கபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் கூறப்பட்டுள்ளன.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் செந்தில் தொண்டைமானின் மூன்று காளைகள் பங்குபற்றியுள்ளது.

அதன்படி காளையின் உரிமையாளரான செந்தில் தொண்டைமானுக்கு கார் ஒன்று சிறப்பு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு தொடர்பில் செந்தில் தொண்டைமான் கூறியுள்ளதாவது,

என் முன்னோர்கள் பாரம்பரியம் காக்க காளைகள் வளர்த்தனர், நானும் வளர்த்து வருகிறேன். மாணவர்களின் போராட்டத்தால் தான் ஜல்லிக்கட்டு மீது இருந்த தடை நீங்கியது, என்று கூறியுள்ளார்.

அலங்கநல்லூரில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 950 காளைகளும், 1,400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளதுடன், 73 பேர் காயம் அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.