சனிப் பெயர்ச்சி பலன்களும்– பரிகாரங்களும்! | Sanipeyarchi 2017

அச்சம் வேண்டாம்

ஜன்ம ராசிக்கு நான்காவது ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது அர்த்தாஷ்டம சனி என்று அழைக்கப்படுகிறது. கன்னி ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியாக அமர்கிறார். சனியை கண்டு அச்சம் வேண்டாம் அதற்கேற்ப பரிகாரங்கள் இருக்கின்றன. ராசிக்கு ஏழாவது வீட்டில் அமர்ந்தால் அது கண்டசனியாகும்.

10ஆம் இடத்தில்
சனி உங்கள் ராசிக்கு இதுவரை 9ம் இடத்தில் சஞ்சரித்தவர் இனி 10ம் இடமான தொழில் ஜீவ ஸ்தானத்திற்கு வந்து பலன் அளிக்க உள்ளார். மனை, வீடு, வண்டி வாகனங்கள் வாங்குவதில் இருந்து வந்த இழுபறி நீங்கி அவைகளை வாங்க வேண்டிய சந்தர்ப்பம் அமையும். தேவையற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுதல் கூடாது. போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும். விநாயகரை வணங்கி வர பலன்கள் கிடைக்கும்.

 

11ஆம் இடத்தில் சனி
சனிபகவான் உங்கள் ராசிக்கு 11 ஆவது இடத்தில் லாப ஸ்தானத்தில் அமர்வது சிறப்பு. இதுவரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். கொடுத்த பணம் பொருள் நகைகள் இவைகள் எல்லாம் கைக்கு வந்து சேரும். மனை வீடு, வண்டி வாகனங்கள் நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். நன்மை தரும் சனிபகவானை குடும்பதோடு சென்று வடதிருநள்ளாறு சென்று தரிசித்து வரலாம்.

 

12ஆம் இட சனி
ராசிக்கு 12ஆம் இடத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் அடிக்கடி பிரயாணங்கள் செல்ல வாய்ப்பு அமையும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப் போன வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணங்கள் செல்ல வாய்ப்புகள் வந்து அமையும்.
ஏழரை சனியின் ஆரம்பம் என்றாலும் செலவுகளை சுப விரையங்களாக மாற்றிக்கொள்ளவும். குடும்பத்தோடு குச்சனூர் சென்று தரிசனம் செய்து வரலாம்.

 

1ஆம் இடத்தில் சனி
உங்களுடைய ராசிக்கு இதுவரை 12ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் விரய சனியாக சஞ்சரித்த சனி பகவான் இப்பொழுது ஜென்மச் சனியாக உங்களது ராசிக்கு சஞ்சாரம் செய்ய உள்ளார். ஜென்மசனியாக சஞ்சாரம் செய்வது நன்மையும் தீமையும் கலந்த பலன் கிடைக்கும். திருக்கொள்ளிக்காடு சென்று குடும்பதோடு சனிபகவானை தரிசனம் செய்யலாம். சிரமங்கள் குறையும்.

 

இரண்டாம் இட சனி
உங்கள் ராசிக்கு 3ம் வீட்டிற்கும் 4ம் வீட்டிற்கு அதிபதியான சனி பகவான் 2ம் வீட்டில் சஞ்சரிப்பதால் சகோதர சகோதரிகளால் எதிர்பாராத பண வரவும், பொருள் வரவும் கிட்டும். உறவினர்களால் பொருள் வரவு அல்லது சகாயம் ஏற்படும். பாத சனி என்பதால் கால்களை பத்திரமாக பார்க்கவும். ராம பக்தர் அனுமனை சரணடையவும்.

 

3ஆம் இடத்தில் சனிபகவான்
ஏழரை சனி காலம் முடிந்து விட்டது. இனி அடடா மழைடா அடை மழைடா என்று சந்தோஷத்தோடு இருக்கலாம். ஆனால் அதிகம் ஆடக்கூடாது. சனிபகவான் உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது சிறப்பானது. உங்கள் மனதில் இனம்புரியா உற்சாகம் இருந்து கொண்டே இருக்கும். இதுவரை வீட்டில் தள்ளிபோன சுபகாரியங்கள் நடைபெறும்.

 

4 இடத்தில் சனி
இதுவரை உங்களுடைய ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரித்தவர் இனி 4ம் இடத்தில் தனசு ராசியில் அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சாரம் செய்கிறார். இதை நினைத்து பயப்படவோ அல்லது கவலைப்படவோ வேண்டாம். அவரவர் பிறப்பு ஜாதகத்தை பொறுத்து இதன் தன்மை மறுபடும். குடும்பத்தோடு திருநள்ளாறு சென்று சனிபகவானை தரிசனம் செய்து வர கஷ்டங்கள் குறையும்.

 

ஐந்தாம் இட சனி
உங்களது ராசிக்கு 5ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வது இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடைபெற கூடிய வாய்ப்பாகும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். அர்தாஷ்டம சனியில் அல்லல் பட்ட நீங்கள் இனி சற்றே நிம்மதி பெருமூச்சு விடலாம். திருநரையூர் சென்று அங்கே பொங்குசனிபவானை குடும்பத்தோடு வணங்கி வரலாம்.

 

6ஆம் இட சனி
கடகம் ராசிக்கு இதுவரை 5ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் இனி உங்கள் ராசிக்கு 6ம் இடமான ஜெயம், ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்க போகிறார். இரண்டரை ஆண்டு காலமாக போராட்டமாக இருந்து வந்த வாழ்க்கையில் வெற்றியின் சுவையை உணர வேண்டிய தருணம் வந்து விட்டது.

 

7ஆம் இடத்தின்
சனி இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் சனி பகவான் கோசாரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். இனி அவர் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் கணடச்சனியாக அமர்ந்து பலன்களை கொடுப்பார். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பம் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ வழி ஏற்படும். குச்சனூர் சென்று சுயம்பு சனிபகவானை வணங்கி வாருங்கள்.

 

8ஆம் இடத்தில் சனி
இதுவரை 7ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் கண்ட சனியாக உங்களை வாட்டி வதைத்து ஒரு வழி பண்ணிவிட்டார் என்றாலும் ஒரு சில நன்மைகளும் இல்லாமல் இல்லை. இனி அவர் அஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது சற்று சுமாரான பலன் களையே அளிப்பார் என்று கூற வேண்டும். அமைதியாக இருந்தால் வம்பு வராது. எள் எண்ணெய் தீபம் ஏற்றி சனிபகவானை வணங்க வேண்டும். பரிக்கல் நாராயணரை வணங்கலாம்.

 

9ஆம் இட சனி
இதுவரை உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனிபகவான் இன்று முதல் பாக்யசனியாக 9ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். 9 ஆம் இடம் பாக்ய ஸ்தானம். நினைத்ததே நடக்கும். ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் தெய்வ அனுகூலத்தை உண்டு பண்ணுவார். முடிந்தவரை குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். குலத் தெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி வர எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும்.