மலர் டீச்சரின் ஆசை நிறைவேறியது

sai pallavi

Sai Pallavi சாய் பல்லவியின் ஆசையை நிறைவேற்றிய சூர்யா

தமிழ்ப் பெண்ணான சாய் பல்லவி அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘ப்ரேமம்’ படத்தில் மலர் டீச்சர் கேரக்டரில் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படத்தால் ஏராளமான கேரள ரசிகர்களும், தமிழ் ரசிகர்களும் அவருக்கு உருவானார்கள். தற்போது சாய் பல்லவி தெலுங்கிலும் பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார்.

தமிழில் அவர் நடித்த ‘கரு’ படம் பிப்ரவரியில் ரிலீஸாகிறது. தனுஷுடன் ‘மாரி 2’ படத்தில் ஒப்பந்தம் செய்ப்பட்டுள்ளார். இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்திலும் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. சாய் பல்லவி ‘’நான் சூர்யாவின் தீவிர ரசிகை. அவருடன் ஜோடி சேர ஆசைப்படுகிறேன்’’ என்று பலமுறை தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இப்போது அது நிறைவேறியதால் மிக உற்சாகமாக உள்ளார்.

முதலில் சாய் பல்லவிக்கு அந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் தான் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.