சாய்பல்லவியின் முதல் தமிழ்ப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

இயக்குனர் விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி நடித்த முதல் தமிழ்ப்படமான ‘கரு’ திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்னரே வெளியீட்டுக்கு தயாராகிவிட்ட போதிலும் சரியான திகதிக்காக காத்திருந்த நிலையில் தற்போது வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வரும் பெப்ரவரி 23ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் வெளியீட்டு திகதியுடன் கூடிய போஸ்டரும் இணையதளங்களில் வெளியாகியுள்ளது

சாய்பல்லவி, நாகசெளரியா, ஆர்ஜே பாலாஜி, சந்தானபாரதி, ரேகா, நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

நீரவ்ஷா ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.