அரிசி இறக்குமதி

அடுத்தவாரத்திற்குள் 3,000க்கும் மேற்பட்ட மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது.

அடுத்தவாரமளவில் இத்தொகை அரிசி இறக்குமதி செய்யப்படவிருப்பதாக கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத் தலைவர் ரொஹான் த அத்துகோரல தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் அரிசி நாடு முழுவதிலுமுள்ள ச.தொ.ச விற்பனை நிலைய வலயமைப்பினூடாக விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்குத் தேவையான அரிசியில் 25 வீதம் வரையிலான அரிசி சதொச விற்பனை நிலையங்கள் ஊடாகவே விநியோகிக்கப்பட்டுவருகிறது. நுகர்வோருக்கு சதோச நிறுவனம் தொடர்ந்து அரிசியை தட்டுப்பாடின்றி விநியோகிக்கும் என்று கூட்டுறவு மொத்த விற்பனை நிலைய தலைவர் ரொஹான் த அத்துகோரல மேலும் தெரிவித்தார்.