அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் – ஜனாதிபதி சந்திப்பு

அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள்(Representatives of the US Congress) – ஜனாதிபதி சந்திப்பு

 

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மரியாதையின் நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் குடியரசுக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் ரொஸ்கம் தலைமையில் ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர்களான டேவிட் பிரைஸ், ஜெரால்ட் ஈ கொனோலி மற்றும் குடியரசு கட்சி உறுப்பினர் அட்ரியன் ஸ்மித் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 Representatives of the US Congress

இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தல், ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்தல் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் இருகட்சி ஆணைக்குழுவான ஜனநாயக பங்கேற்பு சபைக்கும் (HDP) இலங்கை பாராளுமன்றத்திற்குமிடையிலான உறவுகளை மேம்படுத்தல் என்பவையே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

அமெரிக்காவுக்கும் இலங்கைக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் பலமான நிலையில் இருப்பது குறித்து திருப்தி வெளியிட்ட ஜனாதிபதி, பொருளாதாரம் மற்றும் முதலீட்டுத் துறைகள் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள பரிமாற்ற செயன்முறைகள் குறித்து காங்கிரஸ் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீட்டர் ரொஸ்கன் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சார்பாக தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

நல்லிணக்கம், நாட்டின் அபிவிருத்தி, நல்லாட்சி மற்றும் பிரஜைகள் உரிமைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பாராட்டத்தக்கதாகும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய இலங்கையின் சவால்மிக்க பயணத்தில் அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் மற்றும் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]