வறுமையில்லாத தேசத்தை கட்டியெழுப்புவோம் – ரவி கருணாநாயக்க

ravi kiarunanayake வறுமையில்லாத தேசத்தை கட்டியெழுப்புவோம் என்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிந்தனைக்கமைவாக நாம் இம்முறை உள்ளுராட்சிசபை தேர்தலில் வடக்கில் பெருவாரியான வெற்றியை பெறுவோம் என பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தருமான அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

உள்ளு}ராட்சி சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் யாழ்மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (15.12) யாழ்.கிறீன் கிளாஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

இந்த வேட்பாளர் தெரிவில் மகளீர் விகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்இரவி கருணாநாயக்க சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வழிப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமி நாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜ.தே.க தான் இலங்கையில் அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இந்த நாட்டில் சுமுகமான அரசியல் செய்வதற்கு ஐ.தேகவிற்கு வாக்களித்து பிரதமரும், ஜனாதிபதியும் இந்த நாட்டினை எவ்வாறு கொண்டு செல்கின்றார்களோ அவ்வாறு தொடர்ந்தும் கொண்டு செல்வதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து இந்த நாட்டினையும் பயமில்லாமல் மக்கள் வாழ்வதற்குரிய நிலமையினை ஏற்படுத்தியுள்ளார்கள். அவ்வாறே தொடர்ந்தும் கொண்டு செல்வதற்கு மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]