மு.கா பேராளர் மாநாட்டில் : ஹக்கீம் சூளுரை

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை வளர்த்தெடுத்த பல்லாயிரக்கணக்கானோர் இந்த அரங்குக்கு வெளியே இருக்கின்றனர். 

ஆயிரக்கணக்கான போராளிகள் கவலையோடு இருக்கின்றனர். இந்த இயக்கத்துக்குப் பங்களித்த தாய்மார்கள், சகோதரிகள் யாருமே இங்கு கலந்துகொள்ள முடியாத நிலைமையில் இருக்கின்றார்கள்.

இவ்வாறானதொரு நிலையில், இந்த இயக்கத்தைப் பிளவு -படுத்துவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்” என்று, காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

“காங்கிரஸின் உயர்பீடத்துக்கான தெரிவு நடைபெற்ற போது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்த விவகாரம், பக்கத்தில் இருந்த எங்களுடைய முன்னாள் செயலாளர் நாயகம் சகோதரர் ஹசன் அலி, என்னுடைய பெயரைப் பிரேரித்தார். அதற்காக நான் ஆனந்தம் அடைந்தேன்.

இன்று அவர் மேடையில் இல்லை. அதற்கான காரணங்கள் குறித்து இங்கு நான் பேச வரவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின், 27ஆவது மாநாடு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், பென்குவேட் ஹோலில், நேற்று (12) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்