அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தாயார் காலமானார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தாயாரான உதுமாலெப்பை ஹாஜரா ரவூப் (வயது 89) இன்று (22.09.2017) வௌ்ளிக்கிழமை காலமானார்.

rauff hakeem mother passed away
Rauff Hakeem mother passed away

ஜனாஸா நாளை (23.09.2017) சனிக்கிழமை காலை 10 மணிக்கு 20-1 அல்பேட் பிளேஸ் கொள்ளுப்பிட்டி கொழும்பு 03 என்ற முகவரியிலுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களில் வாசஸ்தலத்தில் இருந்து கொழும்பு 07 ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவர் பாடசாலை முன்னாள் அதிபர் மர்ஹூம் என்.எம்.ஏ. ரவூப் அவர்களின் மனைவியும்- டாக்டர் ஹபீஸ்- ரவூப் ஹஸீர்- ரவூப் ஹக்கீம்- ஹஸான்- ஹஸார் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். தனது கணவர் கடமையாற்றிய தெஹிதெனிமடிகே. கலாவெவ. ஹோராப்பொல. தம்பாலை ஆகிய கிராமங்களிலும் வசித்து வந்திருக்கிறார்.

ஹபுகஸ்தலாவை பிறப்பிடமாகக்கொண்ட மார்க்கப்பற்றுள்ள இவர். தற்போது அருகிவரும் அரபுத் தமிழில் சிறந்த தேர்ச்சி பெற்றவர். அரபுத் தமிழை வளர்க்கும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு தனது மகன் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் இவர் வலியுறுத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.