ரன்சம் வெயர் (ransomware infection)
ரன்சம் வெயர் (ransomware infection)

“ரன்சம் வெயர் வைரஸ் (ransomware infection)” எனப்படும் வைரஸ் 99 நாடுகளில் உள்ள விண்டோஸ் கணனிகளை தாக்கி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bitcoin இல் $300 (LKR Rs 45500) பணம் கோரும் இந்த வைரஸ் , அத்தொகையை செலுத்திய பின்னரே உங்கள் கணனி தகவல்களை பெறமுடியும் என அறிவிப்பு கொடுக்கும்,

“ஷாடோ ப்ரோக்கர்ஸ்” எனப்படும் ஹேக்கர்கள் அமெரிக்க (NSA கருவிகளை) திருடிவிட்டதாகவும், அவற்றை ஆன்லைனில் வெளியிடுவதாகவும் கூறினர். இக்கருவிகள் மூலமாகேவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரன்சம் வெயர் (ransomware infection)
பாதிக்கப்பட்டுள்ள நாடுகள்

மைக்ரோசாப்ட் விண்டோவ்ஸ் மார்ச் மாதம் இவ் அச்சறுத்தலில் இருந்து தமது பாவனையாளர்களை பாதுகாக்கும் பொருட்டு மென்பொருள் மேம்படுத்தல் தொகுப்பு ஒன்றை வெளியிட்டது , இதனை தரவிறக்கம் செய்யாமல் உள்ள கணணிகளையே  இவ் வைரஸ் பந்தாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது