ரஜினியுடன் தலைவர்கள், நடிகர்கள் சந்திப்பு: கட்சி தொடங்கும் பணிகள் தீவிரம்

Rajini meets leaders and Actors, Most of the political parties in Tamil Nadu are in big fear after seeing Rajinikanth’s fast political moves and continuous meeting with leaders and film personalities

சென்னை: அரசியல் தலைவராக அவதாரம் எடுக்கப் போகும் ரஜினியைச் சந்தித்துப் பேசவும், ஆலோசனை கூறவும் தமிழக அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் ரஜினியைச் சந்திக்க ஆரம்பித்துள்ளனர். இன்று மட்டும் தமிழருவி மணியன், நடிகர் ஆனந்த ராஜ் ஆகிய இருவரும் ரஜினி வீட்டுக்கு வந்து பார்த்து பேசிவிட்டுச் சென்றனர்.

தமிழருவி மணியன் முந்தைய பாராளுமன்றத் தேர்தலில் பாஜக + முக்கிய திராவிட கட்சிகளை ஒருங்கிணைக்க பெரும் முயற்சி மேற்கொண்டவர். ரஜினியின் அரசியலில் இனி தமிழருவி மணியனுக்கு முக்கிய இடமிருக்கும் எனத் தெரிகிறது.