நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டில் ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை ,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பல இடங்களிலும் மழை பொழியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மழை மற்றும் இடியுடன் கூடிய மழை சப்ரகமுவ , மேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் காணப்படும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சப்ரகமுவ ஊவா மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் பலத்த மழை பொழியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதனால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.