எதிர்வரும் 24ம் திகதி முதல் மீண்டும் நாட்டில் மழை அதிகரிக்கும்

எதிர்வரும் 24ம் திகதி முதல் மீண்டும் நாட்டில் மழை அதிகரிக்ககூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பொத்துவில் ஊடாக மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வரையில் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் நிலவும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசேடமாக நாட்டின் தென்பகுதியில் மழை அதிகமாக காணப்படும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

காற்றுடன் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதால் மக்களை அவதானமாக இருக்குமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.