பயணிகளுக்கான விஷேட அறிவித்தல்

கரையோர புகையிரத வீதியின் தெஹிவளை மற்றும் வெள்ளவத்தைக்கு இடையிலான வீதி எதிர்வரும் 23ம் திகதி முதல் 27ம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும் என்று புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.

அந்த இரண்டு புகையிரத நிலையங்களுக்கும் இடையில் காணப்படுகின்ற பழைய பாலத்தை நீக்கிவிட்டு புதிய பாலம் அமைக்கப்படுவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க கூறினார்.

அதன்படி எதிர்வரும் 23ம் திகதி இரவு 10 மணி முதல் 27ம் திகதி மாலை 4 மணி வரை குறித்த புகையிரத வீதி மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை, காலி மற்றும் அளுத்கமவில் இருந்து வரும் புகையிரதங்கள் தெஹிவளை வரையில் மட்டுப்படுத்தப்படும் என்பதுடன், அந்தப் பிரதேசங்களுக்கான புகையிரத சேவைகள் தெஹிவளையிலிருந்து ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பமாகும் புகையிரதங்கள் வெள்ளவத்தை வரை மட்டுப்படுத்தப்படும் என்றும் புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க கூறினார்.