மரக்கறி வகைகளின் விலை வீழ்ச்சி

மரக்கறி வகைகளின் விலை குறைவடைந்துள்ளது.

நுவரெலியா போன்ற பகுpகளில் மரக்கறி உற்பத்திக்கு ஏற்ற காலநிலை நிலவியதினால் இம்முறை உற்பத்தி அதிகரித்துள்ளது.

கரட், பீற்றூட், லீக்ஸ், கோவா உட்பட பல்வேறு மரக்கறி வகைகளின் விலை குறைவடைந்திருப்பதாக மொத்த மரக்கறி வர்த்தகர் சமன் முனவீர தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ கரட் 20 ரூபாவுக்கும், 25 ரூபாவுக்கும் இடையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிலோ லீக்கஸ் 20 ரூபாவாகும். ஒரு கிலோ கோவா பத்து ரூபாவுக்கும் விற்பனையாகின்றது

. ஒரு கிலோ பொஞ்சி 60 ரூபாவுக்கும், 70 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலையில் விற்பனையாகின்றது. பெரிய மிளகாய் உயர்ந்தபட்சம் 90 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தற்போது பெருமளவில் மரக்கறிவகைகள் சந்தைக்கு வருவதாகவும் மொத்த மரக்கறி வர்த்தகர் சமன் முனவீர மேலும் தெரிவித்தார்.