கமல் அதிகமாகவும், அநாகரிகமாகவும் பேசுகிறார்: பவர் சீற்றம்

சென்னை: ஆர்.கே.நகர் மக்களை அவமானப்படுத்தியுள்ளார் கமல்ஹாசன் என்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார். திரைப்பட வர்த்தக கருத்தரங்கில் பேசிய அவர், அதிகமாகவும், அநாகரிகமாகவும் நடிகர் கமல் பேசுகிறார் என்று கூறியுள்ளார்.

ரஜினியின் அரசியல் பயணத்தை மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் பவர் ஸ்டார் கூறியுள்ளார்.
நடிகர் கமலை கண்டித்து தினகரனின் ஆதரவாளர்கள் அவரது கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் திரைப்பட வர்த்தக கருத்தரங்கில் பேசிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.power star

இதனிடையே அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசனுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் பம்மிக்கொண்டு எடுத்த போட்டோ வைரலாகியுள்ளது. பவர் ஸ்டார் சீனிவாசன் பெங்களூரு உட்பட பல்வேறு காவல்நிலையங்களில் மோசடி புகார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]