பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கௌரவ கலாநிதிப்பட்டம்

அவுஸ்ரேலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு (Ranil Wickramasinghe)அந்நாட்டின் டெக்கின் பல்கலைக்கழகத்தினால் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவின் டெக்கின் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் போது இந்த கௌரவ கலாநிதிப் பட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் கல்வி மற்றும் மனித உரிமையை பாதுகாத்தல் போன்ற செயற்பாடுகளுக்காக மேற்கொண்ட பங்களிப்பிற்காக இந்த சர்வதேச கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த பல்கலைக்கழகத்தின் ஊடகப்பேச்சாளர் இது தொடர்பாக தெரிவிக்கையில், மறுசீரமைப்புக்கான சந்தர்ப்பத்தை வலியுறுத்தி மோதல்களை முடிவிற்கு கொண்டுவரும்வகையிலான பொறுப்பிற்காக ஆற்றிய பணியை போன்று எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை கொள்ளக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்தமையினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்த கௌரவ பட்டம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.