பிள்ளையான் 33 வது முறையாக விளக்கமறியலில்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

2005ம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திற்குள் வைத்து நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது, அப்போதைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தநிலையில், இன்று திங்கட்கிழமை மீண்டும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, எதிர்வரும் 20ம் திகதி வரை அவரை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்க நீதவான் எம்.கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, இக் கொலையுடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களான, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா (பிரதீப் மாஸ்டர்), ரெங்கசாமி கனகநாயகம் (கஜன் மாமா) மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய எம்.கலீல் ஆகியோருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.