போராட்டத்தில் இன்று பரந்தன் மக்கள்

காணாமல் போனவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று பரந்தன் மக்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி, அவர்களது உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும், கவனயீர்ப்பு போராட்டம், இன்று 14 நாளாகவும் தொடர்ந்து வருகின்றது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்றையதினம் திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக காணாமல் போனோரின் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.