பெறுமதியுடைய ஹெரோய்னுடன் சிக்கிய பாகிஸ்தான் இளைஞர்

ஐந்து கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோய்ன் போதைப் பொருளுடன் வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 01.40 மணிக்கு டோஹாவில் இருந்து வருகைதந்த கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 668 என்ற விமானத்தில் அவர் இலங்கைக்கு வந்துள்ளார்.

குறித்த வௌிநாட்டுப் பிரஜை மீது சந்தேகமடைந்த விமான நிலைய போதை தடுப்பு பொலிஸார் அவரை பரிசோதனை செய்துள்ளனர்.

இதன்போது அந்த நபரின் பயணப் பொதியில் இருந்த 05 கிலோ 500 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.