பத்மாவத் திரையிடப்பட இருந்த திரையரங்கம் போராட்டக்காரர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவதி படம் சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக பத்மாவத் என பெயர் மாற்றப்பட்டது. சில மாநிலங்களில் இந்த படத்திற்கு தடை விதித்த நிலையில் அதை உச்ச நீதிமன்றம் நீக்கியது.

அதனால் நிம்மதியாக இருந்த படக்குழுவுக்கு தற்போது மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக தற்போது ஒரு திரையரங்கம் போராட்டக்காரர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.