திருமணம் நின்றுவிட்டது, யாரும் வர வேண்டாம்: சமந்தா மாமனார் அறிவிப்பு

ஹைதராபாத்: நடிகர் நாகர்ஜுனாவின் (nagarjuna) இளைய மகன் அகிலின் திருமணம் திடீர் என்று நின்றுவிட்டது என்று கூறப்படுகிறது.
தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, நடிகை அமலா தம்பதியின் மகன் அகில் அகினேனிக்கும் அவரது காதலியான முன்னணி ஆடை வடிமைப்பாளரான ஸ்ரேயா
பூபலுக்கும் கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது.

nagarjuna

அகிலுக்கும், பிரபல தொழில் அதிபர் ஜிவிகே ரெட்டியின் பேத்தியுமான ஸ்ரேயாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்களாம். இதையடுத்தே திருமணம் நிறுத்தப்பட்டுள்ளதாம்.

nagarjuna

என் வீட்டிற்கு சமந்தா, ஸ்ரேயா என இரண்டு மகள்கள் வருகிறார்கள் என்று சந்தோஷமாக கூறி வந்தார் நாகர்ஜுனா. இந்நிலையில் திருமணம் நின்றுள்ளது. நாகர்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் அண்மையில் திருமணம் நிச்சயமானது என்பது குறிப்பிடத்தக்கது.