மாணவர்கள் மூவர் மாயம்

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள், காணாமல் போயுள்ளதாக(missing students) அவர்களது பெற்றோரால், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், திங்கட்கிழமை (30) இரவு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

missing students

மதியம் வீட்டில் உணவு அருந்திவிட்டு வெளியில் சென்று, விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த மூன்று மாணவர்களும் மாலை ஆகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.