களுத்துறை சிறைச்சாலை பஸ்ஸின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பொலிஸாரே பொறுப்புக் கூற வேண்டும் – அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன்

களுத்துறை சிறைச்சாலை பஸ்ஸின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பொலிஸாரே பொறுப்புக் கூற வேண்டும் என, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பாரிய குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய நபர்கள் இன்று சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதால், பாதுகாப்பளிக்குமாறு நேற்றையதினமே பொலிஸாரிடம் கோரப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை காரணமாக, பொலிஸார் அந்தக் கோரிக்கையை நிராகரித்ததாக, சுவாமிநாதன் கூறியுள்ளார்.

இது குறித்து அமைச்சரால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தால், துப்பாக்கி பிரயோகத்தை தடுத்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.