லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கான பொதுமன்னிப்பிற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

சட்டரீதியிலான அனுமதியை பெறாது லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கான பொதுமன்னிப்பிற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஆலோசனைக்கமைவாக இலங்கைக்கான லெபனான் தூதுவர் திருமதி ஆர்.கே. விஜரத்ன மென்டிஸ் லெபனான் அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் லெபனான் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த பேச்சுவர்த்தையில் லெபனானின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இப்ராகிம் அபாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் எட்டப்பட்ட முரண்பாட்டிற்கு அமைவாக லெபனானில் தற்பொழுது தங்கியுள்ள 400 பேர் நாடு திரும்பமுடியும்.

இந்த பொதுமன்னிப்பு கால பகுதியில் இலங்கையர் எவரும் கைதுசெய்து தடுத்து வைக்கப்படமாட்டார்கள். ஏற்கனவே 2004ம் ஆண்டு 2006ம் ஆண்டு மற்றும் 2010ம் ஆண்டுகளிலும் இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.