மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரு கடையில் மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

மதுரையிலுள்ள பிரசித்திப்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் சன்னதியில் கோயிலுக்குச் சொந்தமான ஏராளமான கடைகள் இருக்கும். அம்மன் சந்நிதிக்கு செல்லும் வழியில் ஆயிரங்கால் மண்டம் உள்ளது. அப்பகுதியில் விளையாட்டு பொருட்கள், கைவினைப்பொருட்கள், வளையல்கள் விற்கும் கடைகள் ஐம்பதுக்கும் மேற்பட்டது உள்ளது. 10 மணி அளவில் கோயில் நிர்வாகம், நடையைச் சாத்திவிட்டு சென்றனர்.
meenatchi amman kovil fire

அதன்பின்னர், கோயிலுக்குள் இருந்து புகை மூட்டமாக வந்துள்ளது. அதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பிறகு, கோயில் நடையை திறந்துப் பார்த்தப்போது, கடைகள் தீ பிடித்து எரிந்துள்ளது. மூன்று கடைகளுக்கு தீ பரவியுள்ளது. அந்தக் கடைகளிலுள்ள பொருள்கள் எரிந்து நாசமாயின.

அந்தக் கடைகளில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள் இருந்துள்ளன. அதனால், தீ விடாமல் எரிந்து வருகிறது. 5 தீயணைப்பு வாகனங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் தீயணைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மின் கசிவின் காரணமாக தீ பற்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]