முகப்பு Music Mazhai Kuruvi Full Song – Chekka Chivantha Vaanam – AR Rahman –...

Mazhai Kuruvi Full Song – Chekka Chivantha Vaanam – AR Rahman – Mani Ratnam

Mazhai Kuruvi Full Song – Chekka Chivantha Vaanam – AR Rahman – Mani Ratnamநீள மழைச் சாரல் பாடல் வரிகள் – Mazhai Kuruvi Lyrics

நீள மழைச் சாரல்
தென்றல் நெசவு நடத்தும் இடம்.
நீள மழைச் சாரல்

வானம் குனிவதிலும்
மண்ணை தொடுவதிலும்
காதல் அறிந்திருந்தேன்

காணம் உறைந்து படும்
மௌன பெருவெளியில்
ஒரு ஞானம் வளர்த்திருந்தேன்.
இதயம் எரித்திருந்தேன் -நான்
இயற்கையில் திளைத்திருந்தேன்

சிட்டு குருவி ஒன்று
சிநேகப்பார்வை கொண்டு.
வட்ட பாறையின் மேல்
என்னை வா வா என்றது.

கீச் கீச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு எதுவுமின்றி
பிரியமா என்றது (2)

ஒற்றை சிறு குருவி நடத்தும்
ஓரங்க நாடகத்தில்
சற்றே திளைத்திருந்தேன் .

கீச் கீச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி
பிரியமா என்றது

ஒருநாள் கனவு
இதற்கு பேர் உறவோ
யார் வரவோ.
நீ கண்தொட்டு
கடுந்தெகும் காற்றோ.
இல்லை கனவில்
நான் கேட்கும் பாட்டோ.
இது உறவோ, இல்லை பரிவோ .

நீள மழைச் சாரல்
நா ந ந நானா
நான் நா நா..

அலகை அசைத்தபடி
பறந்து ஆகாயம் கொத்தியதே.
உலகை உதறிவிட்டு
சற்றே உயரே பறந்ததுவே.

கீச் கீச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி
பிரியமா என்றது

முகிலினம் சர சர சரவென்று கூட.
இடி வந்து பட பட படவென்று வீழ.
மழை வந்து சட சட சடவென்று சேர.
அடை மழை காட்டுக்கு
குடை இல்லை மூட.

வானவெளி மண்ணில்
நழுவி விழுந்ததென்ன…
திசையெல்லாம்.. மழையில்
கரைந்து தொலைந்ததென்ன.

சிட்டு சிறு குருவி
பறந்த திசையும் தெரியவில்லை.
விட்டு பிரிந்துவிட்டேன்
பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்.

விட்டு பிரிந்தேன் பிரிந்தேன்
உயிர் நனைந்தேன் நனைந்தேன்.
அந்த சிறு குருவி போக
அலைந்து துயர் படுமோ
துயர் படுமோ.
இந்த மழை சுமந்து
அதன் றெக்கை வலித்திடுமோ
வலித்திடுமோ.

காற்றில், அந்நேரம்,
கதையே வேறு கதை.
கூட்டை, மறந்துவிட்டு
குருவி கும்மி அடித்தது கான் .

சொட்டும் மழை சிந்தும்
அந்த சுகத்தில் நனையாமல்.
என்னை எட்டி போனவளை
எண்ணி எண்ணி
அழுதது கான் அழுதது கான்.

செக்க சிவந்த வானம் படத்தில், ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் பூமி பூமி மற்றும் மழை குருவி ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளது.

Mazhai Kuruvi Full Song from film Chekka Chivantha Vaanam. Music by AR Rahman. Directed by Mani Ratnam.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com