இந்து சமுத்திர வலய நாடுகளின் அமைச்சர்களுக்கான மாநாட்டில் அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்டுள்ளார்.

அரச தலைவர்களின் மாநாட்டிற்கு நிகரான இந்து சமுத்திர வலய நாடுகளின் அமைச்சர்களுக்கான மாநாடு இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் நடைபெறுகின்றது.
இன்றைய தினம் இடம்பெறும் இந்த மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்டுள்ளார்.

இந்துசமுத்திர பிராந்திய நாடுகளின் வெளிவிவகார அமைச்சுக்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்து சமுத்திரத்தை அமைதியான நிலையான சௌபாக்கியமிக்க பிராந்தியமாக மாற்றியமைத்தல், கூட்டு ஒத்துழைப்பை பலப்படுத்தல் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த மாநாடு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சமுத்திரக் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வர்த்தகம், முதலீடுகளுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துதல், கடற்றொழில் நடவடிக்கை குறித்த முகாமைத்துவம், இடர்களைக் கட்டுப்படுத்துல், கல்வி,விஞ்ஞானம், தொழில்நுட்பம், கலாசார விடயங்களை பரிமாறிக் கொள்ளல் உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பில் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளது.